top of page

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 ( அறிமுகம் )

                       இரா.செபாஸ்டியன் லாரன்ஸ், துணைத் தலைவர், ஊழல் ஒழிப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம்.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இந்திய மக்களுக்கு கிடைத்த வலுவான சட்டமாக கருதப்படுகிறது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் ஊழலை ஒழிக்க பயன்படக்கூடிய வலுவான ஆயுதம். இச்சட்டதின்படி எந்த ஒரு இந்திய குடிமகனும் தனக்கு தேவையன தகவல்களை உரிய காலதில் பெறமுடியும்.

 

தகவல் அளிக்கக் கடமைப்பட்டவர்கள்

இச்சட்டத்தின்படி பொது அதிகார அமைப்பு, அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள், வாரியங்கள், பராளுமன்றத்தால் நிறுவப்பட்ட அமைப்புகள், சட்ட மன்றத்தால் நிறுவப்பட்ட அமைப்புகள் உரிய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள், அரசுக்கு சொந்தமான கட்டுப்பட்டில் உள்ள அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள், மற்றும் அரசால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெகுவான நிதி வழங்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்களும் தகவல் அளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை குறித்த தகவல்கள் மறுக்கப்படலாம்.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது போன்ற விவரங்களை கேட்கலாம்.
 

விண்ணாப்பிக்க வேண்டிய முறை
ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம். எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது.

 

தகவல் அளிக்கத் தவறினால் அபராதம்
இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.
தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும்.

தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

bottom of page