top of page

மனுநீதி

இப்பகுதியில் குறை கூறுவது நமது நோக்கமல்ல. குறைகளுக்கு தீர்வு காண்பதே நோக்கம்.

                               -இணையக்குழு

 

இப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களிடம் இருந்து நேரடியாகவும், மினஞ்சல் மூலமாகவும் கிராமத்தின் தேவைகள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் பெறப்படும். அவற்றை சங்கத்தின் மூலம் தகுந்த அதிகார அமைப்பிற்கு அனுப்பி அதன் நடவடிக்கையும் தற்போது அதன் நிலையையும் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் இதே பகுதியில் வெளியிடப்படும்.

 எனவே கிராம குடிமக்கள் மற்றும் உறுப்பினர்கள் கிராமத்தின் தேவையையும், புகார்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

 

 

நன்றி!!! வட்டாரப் போக்குவரத்து அலுவலர், காஞ்சிபுரம்.

மனு: காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் முதல் ஏனத்தூர் வரையிலான சாலையில் மிக வேகமாக செல்லும் மோட்டர் வாகணங்களால் தொடர்ந்து விபத்துக்கள் நடந்தது. பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. எனவே இவற்றை தடுக்கும் முகமாக தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகை, வேகத்தடை போன்றவை அமைத்திடவும், போக்குவரத்தை கண்காணித்திடவும் மாவட்ட ஆட்சியரிடம் EMPSS சார்பாக மனு அளிக்கப்பட்டது.

 

நீதி: இதனை பரிசிலித்த காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் விபத்துக்கள் தடுக்கும் பொருட்டு சாலையின் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்து தந்துள்ளார்.

வளர்கல்வி மையம்

 

ஏனாத்தூர் சமத்துவபுர நூலகம்.

 

மனு: சமத்துவபுரத்தில் எந்த மதத்தின் கோவிலுக்கும் அனுமதியில்லை. இருக்கும் ஒரே அறிவுத் திருக்கோயில் இந்த நூலகம்தான். இது அமைதியான, அழகான, இயற்கைச் சூழலில் அமைத்துத் தரப்பட்டது.  இந் நூலகம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சிதைந்து, அதன் உடமைகள் பாழாக்கப் பட்டு  தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதைச் சுற்றி ஆக்கிரமிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதே பலரின் விருப்பம். 

 (மனு எண்:KE/13/14605)

நீதி:

கோரிக்கை எண்: KE/13/14605

கோரிக்கை தேதி: 19/08/2013

பெயர்: நிர்வாக குழு உறுப்பினர்

முகவரி: பல்நோக்கு பொது நல ,சமூகசேவைசங்கம்,காஞ்சிபுரம்,ஏனாத்தூர் - அ,
காஞ்சிபுரம்-631501

கோரிக்கை: சீர்குலைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள கட்டிடத்தை சங்க நூலக பயன்பாட்டிற்கு வழங்க கோரி மனு

மனுதாரர் தன்மை: ஏனையவை

நடவடிக்கை: நிராகரிக்கப்பட்டது

தொடர்புடைய அலுவலர்: வட்டார வளர்ச்சி அலுவலர்ொ வாலாஜாபாத்

பதில்: பொது மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளதால் தனியார் நிறுவனமான தங்களுக்கு வழங்க இயலாது.

அண்ணா மறுமலற்சி திட்ட நூலகம்.

மனு: இன்நூலகம் 2009-2010 ம் ஆண்டு அண்ணா மறுமலற்சி திட்டத்தில் கட்டப்பட்டது. இன் நூலகம் பகுதிநேர (எபோதாவது மாலை 3.00 - 5.00) நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் திறக்கப்படுவதில்லை. இதை முழு நேர நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல முறை கிராம நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு, பின்னர் கிராம சபையில் தீர்மனமும் நிரைவேற்றப்பட்டுள்ளது.

 

பூட்டி வைத்துள்ள புத்தகங்கள் வாசகர்  வருகைக்கா காத்திருக்கின்றன.

விளையாட்டுத் திடல்?

அநேகமாக இந்த இடம் விளையாட்டுத்திடலாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் இந்த இடத்தில் இந்த இந்த விளம்பர பதாகையைத்தவிர சிறு மண் குன்றுகள் மட்டுமே  உள்ளது. இப் பதாகையில் இத்திட்டம் அண்ணா மறுமலற்சி திட்டத்தில் 2009-2010 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதாகவும், திட்ட மதிப்பீடு சுமார் 2,00,000 என்றும் எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை இது விளையாட்டு திடல் என்று உறுதிசெய்யப்பட்டால் இதை இளையோர்கள் விளையாடுவதற்கு ஏற்றவகையில் சீரமைத்து தரவேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாகும்.

 

bottom of page